சொர்க்க வாசல் திறப்பு..!! இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் 21 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் ஜனவரி 10ஆம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு திறக்கப்படவுள்ளது. இந்தாண்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 2,500 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இந்நிலையில், உள்ளூர் மக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வசதியாகவும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஜனவரி 10ஆம் தேதி அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அத்தியாவசிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 25ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.