முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மரணம் உங்களை நெருங்குகிறதா? கருட புராணம் கூறும் அறிகுறிகள் இதோ..!!

The Garuda Purana gives a clear description of death, the signs of death and what happens after it.
09:51 AM Oct 26, 2024 IST | Mari Thangam
Advertisement

கருட புராணம் இந்து மதத்தின் மிக முக்கியமான நூல்களில் ஒன்று. இந்த கருட புராணத்தில் மனிதர்களின் வாழ்க்கை, இறப்பு, அடுத்த பயணம் அதாவது.. இறப்புக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை விளக்கியுள்ளனர். மேலும் மனிதன் செய்யும் பல்வேறு கர்மாக்களுக்கு வெவ்வேறு தண்டனைகளையும் விளக்கியுள்ளனர். அந்த வகையில் இந்து சாஸ்திரத்தில் கருட புராணத்தில் இறப்பு பற்றியும் இறப்பின் அறிகுறிகள் பற்றியும் அதன் பின்னர் என்ன நடக்கும் என்பது குறித்தும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

Advertisement

கருட புராணத்தின் அடிப்படையில் மரணம் நிகழ்வதற்கு முன்னர் எமதர்ம ராஜா ஒரு நபருக்கு பல அறிகுறிகளைக் கொடுக்கிறார். அறிகுறிகள் ஒருவருடைய நிழல் தண்ணீரிலோ, எண்ணெயிலோ, கண்ணாடியிலோ தோன்றாவிட்டாலோ அல்லது ஒருவரின் நிழல் சிதைந்து காணப்பட்டாலோ, உடலை விட்டு வெளியேறும் நேரம் வந்துவிட்டது என்பதை குறிக்கின்றது.

ஒருவன் இறக்கும் நாட்கள் நெருங்கும் போது அவரின்  பார்வை மங்கத் தொடங்குகிறது. தன்னைச் சுற்றி அமர்ந்திருப்பவர்களைக் கூட பார்க்க முடியாத நிலை ஏற்படுகின்றது. ஆனால், தன் வாழ்நாளில் நல்ல செயல்களையோ அல்லது கர்மங்களையோ செய்தவர், இறக்கும் போது மகிமையான ஒளியைக் பார்ப்பார் எனவும் கருட புராணத்தில் குறிப்பிடப்படுகின்றது. 

மரண நேரம் நெருங்கும்போது, எமனின் இரண்டு தூதர்கள் இறக்கப்போகும் நபரின் முன் நிற்பதாகவும் கருடபுராணம் கூறுகிறது. தன் வாழ்நாள் முழுவதும் தீய செயல்களைச் செய்தவர்கள் அதை பார்த்து அஞ்சுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிர் உடலை விட்டு வெளியேறும் கடைசி நேரத்தில், அந்த நபரின் குரலும் மங்க ஆரம்பிக்கும். யாரோ திணறுவது போல் குரல் கரகரப்பாக மாறும்.

கருட புராணத்தின் படி, இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் முன்னோர்கள் கனவில் தோன்றுவார்கள். முன்னோர்கள் கனவில் அழுது கொண்டிருந்தால் அல்லது சோகமாக இருந்தால், உங்கள் மரணம் நெருங்கிவிட்டது என்பதை உணர்த்துவதாக கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Read more ; உஷார்.. இந்த இரண்டு எண்ணிலிருந்து உங்களுக்கு கால் வருதா? உடனே இத பண்ணுங்க..!

Tags :
description of deathGaruda Purana
Advertisement
Next Article