For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மக்களே...! கால்நடை மத்தியில் பரவும் நோய்...! உடனே இந்த தடுப்பூசி போட வேண்டும்...! இல்லை என்றால் ஆபத்து

06:30 AM Nov 04, 2023 IST | 1newsnationuser2
மக்களே     கால்நடை மத்தியில் பரவும் நோய்     உடனே இந்த தடுப்பூசி போட வேண்டும்     இல்லை என்றால் ஆபத்து
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம், கால்நடை பராமரிப்புத் துறை, தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், நான்காம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கால்நடைகளில் ஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் மூலம் விவசாயிகளுக்கு கால்நடைகளில் இறப்பும் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. மேலும், பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளில் எடை குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. பெரும்பான்மையான கால்நடை உரிமையாளர்கள் சிறு குறு விவசாயிகளாக உள்ளதால், கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தாங்க இயலாத நிலையில் உள்ளனர். எனவே, கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.

மேலும், இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம் நோய் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள் சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மைக் கொண்டது. மேலும், இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.

எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 169200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் நான்காம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி 06.11.2023 முதல் 21 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றிற்கு கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசி தவறாது போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement