Orange Alert | நீலகிரி கோவையில் கனமழைக்கு வாய்ப்பு!! 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!!
சமீபத்தில்தொடங்கிய தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் ஒன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 12 -20 செ.மீ. மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இன்று முதல் ஏழு நாட்கள் தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். நீலகிரி மற்றும் கோவையில் ஒரு சில இடங்களில் இரண்டு நாட்களுக்குக் கனமழை இருக்கும். தமிழ்நாட்டில் இன்று நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட இரண்டு மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர்,திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Read more | நீட் தேர்வு முறைகேடு..!! தொடர்ந்து அனுமதி மறுத்த சபாநாயகர்..!! கூண்டோடு வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்..!!