கள்ளக்காதலி குடும்பத்திற்கு பணத்தை வாரி கொடுத்த கள்ளக்காதலன்..!! கூலித்தொழிலாளி கொலை வழக்கில் பயங்கர ட்விஸ்ட்..!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூலித் தொழிலாளி மணிகண்டன் கொலை செய்யப்பட்ட வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அச்சமங்கலம் அருகே ஏ.நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (43). இவரது மனைவி வள்ளியம்மாள் (27). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவர்களது மகன்கள் இருவரும் காய்ச்சல் காரணமாக பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த 1ஆம் தேதி மதியம் மனைவியை மருத்துவமனையில் விட்டுவிட்டு வீட்டுக்கு செல்வதாக மணிகண்டன் கூறியுள்ளார்.
ஆனால், அவர் வீட்டிற்குச் செல்லவில்லை, மருத்துவமனைக்கும் திரும்பவில்லை. இது குறித்து வள்ளியம்மாள் பர்கூர் போலீசில், தனது கணவரை காணவில்லை என புகார் அளித்தார். பின்னர் பர்கூர் அருகே நாகமங்கலத்தில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் கடந்த 3ஆம் தேதி மதியம் மணிகண்டன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து மணிகண்டனின் தாய் மீனாட்சி அளித்த புகாரின் பேரில், கந்திக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அங்குள்ள சிசிடிவியை ஆய்வு செய்தபோது, கடந்த 1ஆம் தேதி மதியம் 2 மணியளவில் மணிகண்டன் உள்பட 4 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றது தெரியவந்தது. அவருடன் சென்றவர்கள் யார்? என போலீசார் விசாரித்ததில், மணிகண்டனின் சித்தப்பாவான, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நாகராஜன் (63), பழனிக்குமார் (43), ராஜ்குமார் என்பது தெரியவந்தது. இதற்கிடையே, அவர்கள் காணாமல் போனது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அச்சமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் முன்னிலையில் நாகராஜன், பழனிகுமார், ராஜ்குமார் ஆகியோர் நேற்று சரணடைந்தனர். அப்போது, மணிகண்டனை கிணற்றில் தள்ளி கொன்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேரும் கந்திக்குப்பம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட மணிகண்டனுக்கு வள்ளியம்மாள் என்ற மனைவி உள்ளார். மணிகண்டனின் சித்தப்பா, முன்னாள் ராணுவ வீரர் நாகராஜன், வள்ளியம்மாளுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார்.
இதை பயன்படுத்தி வள்ளியம்மாள் நாகராஜனிடம் பணம் வாங்கியுள்ளார். அதேபோல் மணிகண்டனும் அடிக்கடி பணம் பெற்றுள்ளார். இதன் மூலம் கணவன், மனைவி இருவரும் ரூ.17 லட்சம் வரை கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில், நாகராஜன் மணிகண்டனிடம் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது மணிகண்டன், நீ உன் மருகளுடன் விபச்சார உறவில் இருக்கிறாய். ஏன் என்னிடம் பணம் கேட்கிறாய் என வாக்குவாதம் செய்திருக்கிறார்.
இதனால் மணிகண்டனுக்கும், நாகராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜன், மணிகண்டனை கொலை செய்ய திட்டம் போட்டு, தனக்கு தெரிந்தவர்கள் பழனிக்குமார், ராஜ்குமார் ஆகியோரை அழைத்து ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். இதையடுத்து, கடந்த 1ஆம் தேதி பர்கூரில் இருந்து மது குடிக்க மணிகண்டனை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். அச்சமங்கலம் கூட்டு ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கிவிட்டு நாகமங்கலம் பகுதியில் உள்ள விவசாய கிணறு அருகே 2 இருசக்கர வாகனங்களில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது, போதையில் இருந்த மணிகண்டன், 60 அடி ஆழ கிணற்றில் தள்ளப்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதையடுத்து 3 பேரும் ஒன்றும் தெரியாதது போல் அங்கிருந்து சென்றனர். இதற்கிடையே, போலீஸ் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து சோதனை செய்வதை அறிந்த 3 பேரும் கிராம நிர்வாக அலுவலர் முன் சரண் அடைந்தனர். இதையடுத்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.60,000..!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!