குட் நியூஸ்...! 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு... ரேஷன் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு...!
80 வயதிற்கு மேற்பட்டவர்களும் ரேஷன் கடைகளில் நேரில் சென்று பொருட்களை பெற வேண்டும் என உணவுப்பொருள் வழங்கல் துறை வற்புறுத்தக்கூடாது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முதியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் ரேசன் கடைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. அவர்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களும் ரேஷன் கடைகளில் நேரில் சென்று பொருட்களை பெற வேண்டும் என உணவுப்பொருள் வழங்கல் துறை வற்புறுத்தக்கூடாது. 80 வயதிற்கு மேற்பட்டவர்களும் ரேஷன் கடைகளில் நேரில் சென்று பொருட்களை பெற வேண்டும் என உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டதாக செய்தி வெளியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளவர்கள் ரேசன் கடைகளுக்கு தங்களுக்கு வேண்டியவர்களை அனுப்பிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பத்தை ரேஷன் அட்டைதாரர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும். அதைச் சரிபார்த்த பிறகு அந்த நபரிடம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.