முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரேஷன் கார்டு அப்ளை பண்ணீட்டீங்களா? நாளைக்கே வரலாம்.. மிகப்பெரிய நல்ல செய்தி.. ரெடியா இருங்க!!

The food distribution department has said that the work of issuing new ration card has started. New ration cards will be issued daily from today.
09:49 AM Sep 10, 2024 IST | Mari Thangam
Advertisement

மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இன்று முதல் தினமும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்.

Advertisement

புதிய ரேஷன் கார்டு எப்போது வரும்?

தமிழ்நாட்டில் புதிதாக ரேஷன் கார்டிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய கார்டு வழங்கும் பணிகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளன. சுமார் 7 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்த பலருக்கு இன்னமும் ரேஷன் கார்டு கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 24 லட்சம் ரேஷன் அட்டைகள் செயல்பாட்டில் உள்ளன. தற்போது புதிதாக 2 லட்சத்திற்கும் அதிகமானோர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் சுமார் 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு தாமதம் இன்றி எல்லோருக்கும் கண்டிப்பாக ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது. புதிய ரேஷன் கார்டுகள் அடுத்த மாதம் முடிவதற்குள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு உள்ளது.

ரேஷன் கடைகளின் தேங்காய் எண்ணெய் :

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் விரைவில் புதிய பொருள் ஒன்றை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் புதிதாக இனிமேல் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. தேங்காய் எண்ணெய் நேரடியாக விவசாயிகளிடம் வாங்கி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில் இதற்கான அறிவிப்புகள் பிரச்சாரத்தில் திமுகவினர் மூலம் கொடுக்கப்பட்டது. தற்போது அதற்கான சாத்திய கூறுகளை தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து வருகிறதாம். தமிழ்நாடு ரேஷன் கடைகள் தொடர்பான முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு பொருட்களை சப்ளை செய்யும் நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பாக முக்கியமான உத்தரவு ஒன்று சென்றுள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன. பிற மாநில அரசுகளும் இந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசு, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொருத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது.

இந்த பொருட்கள் எடை மாறக்கூடாது, ஏமாற்ற கூடாது என்பதால் அதை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் பொருட்களில் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. உணவு பொருட்கள் சுத்தமாக கிடைக்க வேண்டும். எடையில் ஏமாற்றம் செய்ய கூடாது என்பதால் பொருட்களை நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

அரிசி, சர்க்கரை. கோதுமை உள்ளிட்ட பொருட்களை பாக்கெட்டுகளில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை எடையில் மாற்றம் இருக்காது. பொருட்களும் பூச்சி இல்லாமல் சுத்தமாக இருக்கும்.

புதிய உத்தரவு : ரேஷன் கடைகளுக்கு பொருட்களை சப்ளை செய்யும் நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பாக முக்கியமான உத்தரவு ஒன்று சென்றுள்ளது. அதன்படி நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பாக வழங்கப்படும் பொருட்களை நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் ஒரு முறை எடை பார்க்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு வந்ததும் ஒரு முறை எடை பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நுகர்பொருள் வாணிபக்கழக பொருட்களில் எடை குறைவதாக வைக்கப்படும் புகார்கள் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Read more ; தவெக மாநாட்டிற்கு சிக்கல்..!! விஜய் எடுத்த அதிரடி முடிவு..!! தொண்டர்கள் அதிர்ச்சி..!!

Tags :
food distribution departmentNew ration cardtn government
Advertisement
Next Article