”முதல்வரால் நடக்க முடியவில்லை”..!! ”கைகள் நடுக்கம், உடல்நிலை சரியில்லை”..!! பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி..!!
தமிழ்நாடு அரசைக் கண்டித்து தேமுதிக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தவகையில், திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்துகொண்டு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. மக்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. தமிழக மக்களும் தமிழ்நாடும் எல்லா வகைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் எந்த பிரச்னையும் இல்லை, நல்லாட்சி நடக்கிறது என்பது போல முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
முதல்வரால் நடக்க முடியவில்லை, கைகள் நடுங்குகின்றன. அவருக்கு உடல்நல பாதிப்பு உள்ளது. கை நடுக்கம் தெரியக்கூடாது என்பதற்காக பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டபடி நடந்து வருகிறார். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் முதல்வர் இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். ஆகவே, மூத்த அமைச்சர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் யாருக்காவது துணை முதல்வர் பதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள் இடம்பெறவில்லையே என்ற கேள்விக்கு, "அது இந்தியா முழுவதற்குமான பட்ஜெட். ஆகவே, ஒவ்வொரு மாநிலத்திற்கும் என்று தனித் தனியாக சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து அம்சங்களும் தமிழகத்திற்கும் சேரும்" என்றும் கூறினார்.
Read More : அதிரடியாக பறந்த உத்தரவு..!! ஹெல்மெட் விஷயத்தில் இனி செம கெடுபிடி..!! வாகன ஓட்டிகள் ஷாக்..!!