முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வந்துவிட்டது சிக்குன்குனியாவிற்கு முதல் Ixchiq தடுப்பூசி!… அமெரிக்கா ஒப்புதல்!

06:13 AM Nov 11, 2023 IST | 1newsnationuser3
Advertisement

சிக்குன்குனியா வைரஸிற்கான உலகின் முதல் தடுப்பூசிக்கு அமெரிக்க சுகாதார அதிகாரிகள் நேற்று ஒப்புதல் அளித்துள்ளனர்.

Advertisement

சிக்குன்குனியா வைரஸ் முக்கியமாக பாதிக்கப்பட்ட கொசு கடிப்பதன் மூலம் பரவுகிறது. சிக்குன்குனியா ஒரு வளர்ந்து வரும் உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாகும். சிக்குன்குனியா வைரஸ் தொற்றின் அதிக ஆபத்து ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் உள்ளது. அங்கு சிக்குன்குனியா வைரஸை பரப்பும் கொசுக்கள் உள்ளன. சிக்குன்குனியா என்பது ஒரு வகையான காய்ச்சல் இது கடுமையான மூட்டு வலியை ஏற்படுத்துகிறது. சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட நபர் தலைவலி, தசை வலி, மூட்டுகளில் வீக்கம் அல்லது சொறி ஆகியவற்றால் பாதிக்கப்படலாம்.

இந்தநிலையில், சிக்குன்குனியா வைரஸிற்கான உலகின் முதல் தடுப்பூசிக்கு அமெரிக்க சுகாதார அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த தடுப்பூசி ஐரோப்பாவின் வால்னேவாவால் உருவாக்கப்பட்டது. இந்த தடுப்பூசி “Ixchiq” என்ற பெயரில் விற்கப்படும். சிக்குன்குனியா வைரஸ் தடுப்பூசி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு சிக்குன்குனியா வைரஸின் அதிக ஆபத்தில் இருக்கும் போது அவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) இன் உயிரியல் மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பீட்டர் மார்க்ஸ் கூறுகையில், இன்று அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி இந்த நோயைக் கட்டுப்படுத்த உதவும். கடந்த 15 ஆண்டுகளில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சிக்குன்குனியா வைரஸ் தொற்றுகள் மூலம் பாதிக்கப்ட்டுள்ளனர். சிக்குன்குனியா வைரஸ் தொற்று தீவிர நோய் மற்றும் நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் சிகிச்சை பெறும் நோயாளி ஆகியோரை இது அதிகம் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்காவில் 3,500 பேருக்கு இரண்டு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த தடுப்பூசியின் காரணமாக தலைவலி, சோர்வு, தசை மற்றும் மூட்டு வலி, காய்ச்சல் மற்றும் குமட்டல் போன்றவை குறைகிறது. சோதனைகளில், Ixchiq தடுப்பூசியைப் பெற்றவர்களில் 1.6 சதவிதம் மக்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. அவர்களில் இருவருக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
The first Ixchiq vaccine for chikungunyaஅமெரிக்கா ஒப்புதல்சிக்கன்குனியாமுதல் Ixchiq தடுப்பூசி
Advertisement
Next Article