இன்று முதல் விடுமுறை..!! சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!
தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செப்.19ஆம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு தொடங்கி நேற்றைய தினம் செப்.27ஆம் தேதி வரை நடைபெற்றது. முதலில் காலாண்டு விடுமுறை 5 நாட்கள் மட்டுமே என்ற நிலையில், அக்.3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று காலாண்டு விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்படுவதாகவும், 7ஆம் தேதி திங்கட்கிழமை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறையின் புதிய உத்தரவின்படி, 9 நாட்கள் காலாண்டு விடுமுறை இன்று செப்டம்பர் 28ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மீண்டும் பள்ளிகள் அக்டோபர் 7ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. வழக்கமாக தொடர் விடுமுறை, காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தினால், நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More : வேளாண் துறையில் முன்னோடி..!! கடைசி வரை இயற்கை விவசாயம்..!! பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி..!!