For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Lok Sabha Election 2024 : இறுதி கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..!!

06:38 PM Jun 01, 2024 IST | Mari Thangam
lok sabha election 2024   இறுதி கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
Advertisement

18வது மக்களவைத் தேர்தலின் நிறைவுக் கட்டமான 7ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஜூன்.1) நடைபெற்றது. பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சண்டிகர் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

Advertisement

மக்களவைத் தேர்தலில் ஏழு கட்டங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகிறது. இன்று பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

மேலும், இன்று (ஜூன்.1) ஒடிசா சட்டப்பேரவையின் எஞ்சியுள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இறுதிக் கட்ட தேர்தலுக்காக ஏறத்தாழ 1.09 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. இறுதி கட்டத் தேர்தல் தொடர்பான பணிகளில் 10.9 லட்சம் பணியாளரக்ள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

7வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவில் வாக்களிக்க ஏறத்தாழ 10.06 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவர்களில் 5.24 கோடி பேர் ஆண்கள் என்றும் 4.82 கோடி பேர் பெண்கள் மற்றும் 3 ஆயிரத்து 574 பேர் மூன்றாம் பாலினத்தவர் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். ஏற்கனவே இரண்டு முறை வாரணாசி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி மூன்றாவது முறையாக அங்கு போட்டியிடுகிறார்.

Read more ; EXIT POLL 2024 RESULTS : மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு!!

Tags :
Advertisement