முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிமுக மாவட்ட செயலாளர் To திமுகவின் கொங்கு மண்டல தளபதி.!முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் எழுச்சியும் வீழ்ச்சியும்.!

05:04 PM Feb 13, 2024 IST | 1newsnationuser4
Advertisement

தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் மின்சாரம் ஆயத்தீர்வை மற்றும் மதுவிலக்கு போன்ற முக்கியமான துறைகளில் அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி. சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்த வழக்கில் அமலாக்கத்துறை இவரை கைது செய்து சிறையில் அடைத்தது. தற்போது மூன்று மாதங்களுக்கும் மேல் ஜாமீன் கிடைக்காமல் சிறை தண்டனை அனுபவித்து வரும் இவர் இலாக்கா இல்லாத அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் தெரிவித்தார். இவரது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு சிபாரிசு செய்தார் முதல்வர். இதனை ஆளுநர் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி பதவி இழந்துள்ளார்.

Advertisement

கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு முக்கியமான தலைவராக விளங்கிய இவர் தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சிறையில் வாடுகிறார். மேலும் பலமுறை உடல் நலப் பிரச்சினைகளால் அவதியுற்ற செந்தில் பாலாஜி அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஒன்றிய கவுன்சிலராக அரசியல் பயணத்தை தொடங்கிய செந்தில் பாலாஜியின் வளர்ச்சி அசுரத்தனமானது.

செந்தில்குமார் என்ற இயற்பெயரைக் கொண்டு செந்தில் பாலாஜி 1996 ஆம் வருடம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அதன்பிறகு 2000 ஆண்டில் அதிமுகவில் இணைந்த இவரது அரசியல் பயணம் ராக்கெட் வேகத்தில் முன்னேறியது. அதிமுகவில் மாணவரணி இணைச் செயலாளராக இருந்த இவர் 2004 ஆம் ஆண்டில் கரூர் மாவட்ட அதிமுக மாணவர் செயலாளராக உயர்ந்தார்.

2006 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். 2007 ஆம் வருடம் அதிமுகவின் கரூர் மாவட்ட செயலாளர் ஆக பதவி உயர்வு பெற்றார் . தொடர்ந்து தனது கடின உழைப்பின் மூலம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போலியான சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்து வந்தார் செந்தில் பாலாஜி.

2011 ஆம் வருட தேர்தலில் வெற்றி பெற்ற இவருக்கு அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை பதவியை வழங்கினார் ஜெயலலிதா. அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சராக நீடித்து வந்தார். 2014 ஆம் வருடத்தில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது முதலமைச்சர் பதவிக்கு செந்தில் பாலாஜியின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது .

2015 ஆம் வருடத்திற்கு பிறகு அதிமுகவில் செந்தில் பாலாஜியின் மவுசு குடைய ஆரம்பித்தது. ஜெயலலிதாவால் தொடர்ந்து ஓரம் கட்டப்பட்டு வந்தார். இவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதோடு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். எனினும் 2016 ஆம் வருட தேர்தலில் சசிகலா ஆதரவால் எம்எல்ஏ சீட்டு வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தினகரன் அணியில் பயணித்த இவர் 2018 ஆம் ஆண்டு மீண்டும் திமுகவில் ஐக்கியமானார்.

2019 ஆம் வருட அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் திமுக சார்பில் களம் இறங்கியவர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இதனைத் தொடர்ந்து 2019 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் இமாலய வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதனால் திமுக தலைவர்களிடம் இவரது மதிப்பு உயர்ந்தது. கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். 2021 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் சட்டசபைக்கு தேர்வானார். திமுக அரசு இவருக்கு மின்சார துறை உள்ளிட்ட முக்கியமான இலாகாக்களில் அமைச்சர் பதவி வழங்கியது. மேலும் கொங்கு மண்டலத்தின் பொறுப்பும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போதைய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூட ஒரு முறை செந்தில் பாலாஜியை கொங்கு மண்டல தளபதி என பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஏறுமுகத்தில் சென்ற செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கை அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளால் சரியத் தொடங்கியது. சட்டத்திற்கு புறம்பான பணப்பரி மாற்றத்தில் கைது செய்யப்பட்ட இவர் அமலாக்கத்துறையால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் உடல் உபாதைகளால் பலமுறை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். இவரது அமைச்சர் பதவியை ஆளுநர் தன்னிச்சையாக தகுதி நீக்கம் செய்தார். இதனை கண்டித்த முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு அமைச்சரை நீக்கும் அதிகாரம் கிடையாது எனக்கூறி இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என அறிவித்தார்.

சிறையில் அடைக்கப்பட்டு 200 நாட்களுக்கு மேலாகியும் ஜாமீன் கிடைக்காததால் தற்போது தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய செந்தில் பாலாஜி முதல்வருக்கு கடிதம் அனுப்பினார். அமைச்சரின் கடிதத்தை ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரை செய்ததை தொடர்ந்து அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். அரசியலின் உச்சத்தில் இருந்த செந்தில் பாலாஜியின் பயணம் தற்போது வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. இதிலிருந்து மீண்டு வருவாரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags :
DmkresignationRise And FallSenthil Balajitn politics
Advertisement
Next Article