முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"திராவிட மாடல்" திண்டாடும் மாடலாக மாறிவிட்டது..! ஆளுநர் தமிழிசை குற்றச்சாட்டு...

09:39 AM Dec 25, 2023 IST | 1newsnationuser2
Advertisement

திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மிக்ஜாம் புயல் மற்றும் அதை தொடர்ந்த வெள்ளத்தால் பெரும் சேதத்திற்கு உள்ளாகியது என்றால், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பொழிவால் பாதிப்பு உண்டானது. நிவாரண பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று நிவாரணப் பணிகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

வெள்ள பாதிப்பு சமயத்தில் முன்னே எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் ஆளும் திமுக அரசியல் தோல்வி அடைந்துள்ளதாக அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர் காட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் அதே குற்றச்சாட்டை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முன்வைத்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்; தென் மாவட்டங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்திருக்க வேண்டும். திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது. தென் மாவட்டங்களில் ஆறு, குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்லை. இந்த சூழ்நிலையை மாநில அரசு மிக மோசமாக கையாண்டுள்ளது. மழை வெள்ளத்தை கையாள்வதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி பேச்சு:

தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார் பிரதமர் மோடி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதி அளித்துள்ளார். வெள்ள பாதிப்பு மதிப்பீடு பணிகளை ஒருங்கிணைக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நியமனம் செய்துள்ளதாக கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

Tags :
Floodmk stalintamilisaiTelengana governor
Advertisement
Next Article