For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வரும் 30-ம் தேதி... 1 முதல் 19- வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்...! ஆட்சியர் அறிவிப்பு

The district collector of Dharmapuri has said that the deworming pills will be given on the 30th.
07:30 AM Aug 25, 2024 IST | Vignesh
வரும் 30 ம் தேதி    1 முதல் 19  வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்     ஆட்சியர் அறிவிப்பு
Advertisement

குடற்புழு நீக்க மாத்திரை வரும் 30-ம் தேதி வழங்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சிறு குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக்கூடிய மாத்திரை குடற்புழு நீக்க மாத்திரை ஆகும். காரணம், குழந்தைகள் உண்ணுகின்ற உணவில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு முழுமையாக கிடைப்பதற்கு குடலில் உள்ள புழுக்களை அழிப்பதற்காக இம்மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இதனை குழந்தைகள் அனைவரும் கட்டாயம் எடுத்துக்கொண்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திட முன்வர வேண்டும். மேலும், குடற்புழு நீக்க மருந்து / மாத்திரைகள் (அல்பெண்டசோல்) குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்தசோகையை தடுக்கவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சுறுசுறுப்பாக இருக்கவும். அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.

Advertisement

1-வயது முதல் 19-வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் (ITI. பாலிடெக்னிக் ) உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்பட்டு வருகின்றது. விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 30.08.2024 அன்று நடைபெற உள்ளது. விடுபட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை தவறாமல் வழங்கப்படும்.

இப்பணிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையினருடன் பள்ளிக்கல்வித்துறை. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, உயர் கல்வி துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 4.12 இலட்சம் குழந்தைகளுக்கும் மற்றும் 20-வயது முதல் 30-வயது வரை உள்ள 1.22 இலட்சம் பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement