மாணவர்களே குட்நியூஸ்!. இனி பள்ளிகளிலும் திரைப்படங்கள் ஒளிபரப்பு!. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
School: அரசு பள்ளிகளில் 6-9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதத்தின் 2 வது வாரத்தில் கல்விசார் திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6-9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் காணும் வகையில், ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இது, மாணவர்கள் தாங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவம் உணர்தல் ஆகிய பண்புநலன்களை அடையாளம் காணுதல், தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர செய்தல் ஆகியன இச்சிறார் திரைப்படம் திரையிடுதலின் முக்கியமான நோக்கமாக அமைகிறது.
அதுமட்டுமின்றி, திரைத்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு கதை எழுதுதல், பாடல் எழுதுதல், நடிப்பு, தயாரிப்பு , கேமரா, எடிட்டிங் முதலிய தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்காக, மாதத்தின் 2 வது வாரத்தில் அரசு பள்ளிகளில் கல்விசார் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
திரையிடப்போகும் கல்விசார் திரைப்படங்களை, முன்கூட்டிய மாதத்தின் முதல் வாரத்தில் EMIS தளத்திலிருந்து தலைமை ஆசிரியருக்கு அனுப்பவேண்டும். இதற்கென்று ஒரு பொறுப்பாசிரியரை நியமிக்க வேண்டும். EMIS தளத்திலிருந்து மட்டுமே திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து திரையில் வெளியிடவேண்டும். மேலும், முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து, DVD அல்லது Pendrive போன்றவற்றில் சேமிப்பு வைத்து, Hi-Tech Lab/TV/projector/ Smart Board மூலம் மாணவர்களுக்கு திரைப்படங்களை ஒளிர வைக்க வேண்டும்.
மாணவர்களுக்கு திரைப்படம் திரையிடப்படும் முன்னரே, தலைமையாசிரியர் மற்றும் பொறுப்பாசிரியர் அந்த திரைப்படத்தை பார்த்து, படத்தின் தலைப்பை பள்ளி வளாகத்தின் சுவரொட்டியில் A4 சீட் அளவில் ஒட்டி வைக்க வேண்டும். திரைப்படங்களை பற்றி எடுத்துரைக்க, ஆர்வமுள்ள துறைசார் வல்லுநரை சிறப்பு விருந்தினராக அழைத்து உரையாற்ற செய்யலாம்.