For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழக அரசின் இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டம்..!! உடனே விண்ணப்பிங்க.. சென்னை கலெக்டர் அறிவிப்பு!

The District Collector of Chennai has ordered to apply for the scheme of providing smart phones to help the differently abled.
05:09 PM Oct 01, 2024 IST | Mari Thangam
தமிழக அரசின் இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டம்     உடனே விண்ணப்பிங்க   சென்னை கலெக்டர் அறிவிப்பு
Advertisement

தமிழக அரசு சார்பாக மகளிர் உதவித்தொகை, புதுமைபெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டதையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இலவச ஸ்மார்ட் போன் பெற சென்னை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடசென்னைக்குட்டபட்ட பார்வையற்ற மற்றும் வாய் பேச இயலாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள் இலவச ஸ்மார்ட் போன் பெற இ-சேவை மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பார்வையற்ற மற்றும் வாய் பேச இயலாத,காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திறன்பேசி பெற தங்களுக்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையத்தில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் கிடைக்கும் :

1.செவித்திறன் பாதிக்கப்பட்ட / பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட 80% 100% உள்ள மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் UDID அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.

2. இளநிலை பட்ட படிப்பு மற்றும் முதுநிலைபட்டபடிப்பு பயிலும், தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பகலாம்.

3. 18 வயது பூர்த்தி அடைந்த பட்டயபடிப்பு /polytechnic ITI பயிற்சி பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

4.மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து அரசு ஊதியம் பெறும் மாற்றுத்திறனாளியாக இருத்தல் கூடாது.

5. அதிகபட்ச வயது வரம்பு 70 ஆகும்.

எப்படி விண்ணப்பிப்பது ? 'இ - சேவை' மையத்தின் வாயிலாக, https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணைப்பில் தங்களது விபரங்களை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more ; பயிற்சி மையத்தில் மாணவிக்கு முத்தம் கொடுத்த ஆசிரியர் கைது..!! – சிக்கவைத்த சிசிடிவி காட்சி

Tags :
Advertisement