முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு : உத்தரவு போட்ட அதிகாரிக்கு பதவி உயர்வா? - ஆட்சியர் விளக்கம்

The district collector has given an explanation amid criticism that the revenue department officer who ordered the firing of Tuticorin Sterlite has been promoted.
09:25 AM Sep 20, 2024 IST | Mari Thangam
Advertisement

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டுக்கு சூடு நடத்த உத்தரவிட்ட வருவாய்த் துறை அலுவலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கண்டனங்கள் எழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு கடந்த செப்டம்பர் 6 அன்று வட்டாட்சியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

Advertisement

இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக உத்தரவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களில் ஒருவருக்கு, வட்டாட்சியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலராக குற்றம் சாட்டப்பட்டுள்ள மு.கண்ணன் என்பவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.

மாறாக, திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் துணை வட்டாட்சியராக பணிபுரிந்த து.கண்ணன் என்பவருக்கு வட்டாட்சியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு அளிக்கப்பட்ட து.கண்ணன் என்பவருக்கும், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பெயர்க்குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more ; ஷாக்!. இன்சுலின் பென் கேட்ரிட்ஜ் பற்றாக்குறை!. சர்க்கரை நோயாளிகள் கடும் அவதி!

Tags :
revenue department officertuticorinTuticorin collector
Advertisement
Next Article