Airpods பயன்படுத்துவதால் இவ்வளவு ஆபத்தா? உஷாரா இருங்க..!!
வயர்லெஸ் ப்ளூடூத் இயர்பட்ஸ்களாக அறியப்படும் AirPods-கள் தனியாக இருக்கும் போதும், பயணங்களின் போதும் விரும்பும் மியூசிக் மற்றும் பாடல்களை கேட்டு ரசிக்க பெரும்பாளான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த வயர்லெஸ் ஹெட்ஃபோன் டிவைஸ்களை பயன்படுத்துவது மூளை கட்டிகள் அல்லது கேன்சரை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த உறுதியான ஆதாரங்கள் இல்லை.
WHO எனப்படும் உலக சுகாதார அமைப்பு மற்றும் கேன்சருக்கான International Agency for Research on Cancer உள்ளிட்டவை செல்போன்கள் மற்றும் வயர்லெஸ் டிவைஸ்களில் இருந்து வெளிவரும் எலெக்ட்ரோமேக்னட்டிக் ஃபீல்ட்ஸை ’ கேன்சரை உண்டாக்க கூடியது’ என குறிப்பிட்டாலும், இப்படி சொல்வதற்கான நேரடி தொடர்பு எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் ;
- 85 டெசிபலுக்கும் அதிகமான ஒலிகளை நீண்ட நேரம் காதுக்கு அருகில் வைத்து கேட்பது உள்காதில் இருக்கும் முடி செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும், இது சத்தத்தால் ஏற்படும் காது கேளாமைக்கு வழிவகுக்கும்.
- காதில் பயன்படுத்தும் டிவைஸ்களை சரியாக சுத்தம் செய்யாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது காது தொற்று மற்றும் எரிச்சல் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
- இந்த டிவைஸை பயன்படுத்துவது காதில் மெழுகு குவிய வழிவகுக்க கூடும். இது காது கேளாமை, காது எரிச்சல், tinnitus மற்றும் பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
- காதுகளுக்கு மிக அருகில் இருக்கும் டிவைஸ்களை பயன்படுத்தி நீண்ட நேரம் இசையை கேட்பது ஹெட்ஃபோன் பயன்படுத்துபவர்களின் அறிவாற்றல் செயல்பாட்டை குறைப்பதாக ஆய்வு கூறுகிறது.
ஏர்போட்கள் அல்லது இயர்போன்களைப் பயன்படுத்தும்போது என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?
- குழந்தைகளை இயர்போன்கள் அல்லது ஏர்போட்களைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.
- ஐபாட்களை நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டாம்.
- இது காது நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
- ஏர்போட்களின் நீண்டகால பயன்பாடு உங்கள் மூளை தொடர்பான பிரச்சனைகளை அதிகரிக்கலாம்.
- ஏர்போட்களை குறைந்த ஒலியில் மட்டுமே கேட்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
நல்ல தரமான இயர்போன்கள் அல்லது ஏர்போட்களை வாங்குங்கள், நிறுவனத்தில் சரிபார்த்த பிறகு ஒலி அளவு மக்களுக்கு வழங்கப்படுகிறது.
Read more ; உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம்!. ஆர்பிஐ எச்சரிக்கை!