For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வாவ்...! CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜனவரி 24-ம் தேதி வரை கால அவகாசம்...!

06:40 AM Dec 31, 2023 IST | 1newsnationuser2
வாவ்      cuet தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜனவரி 24 ம் தேதி வரை கால அவகாசம்
Advertisement

தேசிய தேர்வு முகமையின் (NTA) பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு CUET 2024-2025-க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜனவரி 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வரும் கல்வியாண்டில் (2024-25) முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வுக்குரிய இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புக்கான க்யூட் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 11 முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் https://pgcuet.samarth.ac.in/ என்ற இணையதளம் வழியாக ஜனவரி 24-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஜனவரி 25-ம் தேதி கடைசி நாளாகும். மேலும், விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஜனவரி 27 முதல் 29-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும்.

இந்த நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் வழங்கும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்ட படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும். விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பின்பு தேர்வுக்கான Hall Ticket மார்ச் 7-ம் தேதி வெளியிடப்படும். தேர்வு அட்டவணை, விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட விவரங்களை /www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011 - 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-pg@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்புகொள்ளலாம்.

Tags :
Advertisement