தொலைத் தொடர்புச் சட்டம், 2023-ன் கீழ் ஒளிபரப்பு சேவை... டிசம்பர் 7-ம் தேதி வரை கால அவகாசம்...!
ஒளிபரப்பு சேவைகளை வழங்குவதற்கான சேவை அங்கீகாரங்களுக்கான கட்டமைப்பு குறித்த டிராய் ஆலோசனை அறிக்கை மீதான கருத்துகள் / எதிர் கருத்துகளைப் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) 30 அக்டோபர் 2024 அன்று 'தொலைத்தொடர்புச் சட்டம், 2023-ன் கீழ் ஒளிபரப்பு சேவைகளை வழங்குவதற்கான சேவை அங்கீகாரங்களுக்கான கட்டமைப்பு' குறித்த ஆலோசனை அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து பங்குதாரர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி 20 நவம்பர் 2024 ஆகவும், எதிர் கருத்துகளுக்கு 27 நவம்பர் 2024 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு வரப்பெற்ற கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதிகளை முறையே 27 நவம்பர் 2024 மற்றும் 4 டிசம்பர் 2024 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட்டிப்புக்கான மேலதிக கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது. கருத்துகள் / எதிர் கருத்துக்களை மின்னணு வடிவில் advbcs-2@trai.gov.in மற்றும் jtadvisor-bcs@trai.gov.in -ல் அனுப்பலாம். ஏதேனும் விளக்கங்கள் / தகவல்களுக்கு, திரு தீபக் சர்மா, ஆலோசகர் (B&CS), TRAI தொலைபேசி எண் 91-11-20907774 இல் தொடர்பு கொள்ளலாம்.