காற்றின் தரத்தை கண்டறிய Air View+.. Google Maps செயலியில் அறிமுகமான அட்டகாசமான அம்சம்..!!
நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் காற்றின் தரம் குறித்த தகவலை வழங்க Air View+ என்ற புதிய அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கூகுள் மேப்ஸ் செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த செயலியை ஒரு சில இடங்களில் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் சிக்கல் ஆகிவிடும். இந்நிலையில் Air View+ என்ற புதிய அம்சம் கூகுள் மேப்ஸ் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அம்சம், உள்ளூர் காலநிலை தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், காலநிலை செயல்பாட்டுக் குழுக்கள், பெருநிறுவனங்கள், நகர நிர்வாக அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் காற்றில் உள்ள பிரச்சனையைக் குறித்துத் தெரிந்துகொள்ள பயன்படுகிறது. இந்த சென்சார்கள் ஒவ்வொரு நிமிடமும் காற்றின் தர அளவீடுகளை வழங்குகின்றன. இந்த சென்சார்கள் 150க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவை காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்கின்றன.
ஐஐடி டெல்லி, ஐஐடி ஹைதராபாத், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள், CSTEP போன்ற காலநிலை நடவடிக்கை குழுக்களின் ஆராய்ச்சியாளர்கள் ஆதரவுடன் இந்த சென்சார்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன என்று கூகுள் கூறியுள்ளது. காற்றின் தர அளவீடுகளை விரைவாகக் கணக்கிட Google AI ஐப் பயன்படுத்தி தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது என்றும் கூகிள் தெரிவித்துள்ளது.
கூகுள் ஏஐ மூலம் இயக்கப்படும் Air View+ அம்சம் ஆனது இந்தியா முழுவதும் உள்ள பயனர்களுக்குக் கூகுள் மேப்பில் உடனுக்குடன் காற்றின் தரம் குறித்த தகவலை வழங்குகிறது. அதன்பின்பு சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் காற்றின் தர அளவீடுகள் பயன்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபிளைஓவர் அலர்ட் : கூகுள் மேப்ஸ் செயலயில்ஃபிளைஓவர் அலர்ட் (Flyover Alerts) ஆனது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதாவது நெரிசல் அதிகமாக உள்ள நகரச் சாலைகளில் பயணம் செய்யும் போது, ஒரு ஃபிளைஓவர் வந்தால் மேலே செல்ல வேண்டுமா அல்லது கீழே செல்ல வேண்டுமா என்ற குழப்பம் வரும். சில சமயங்களில் இந்த சிறிய தவறான முடிவால் பல கிமீ கூடுதல் பயணம் செய்த நிகழ்வுகளும் பலருக்கும் நிகழ்ந்திருக்கும்.
இந்த மிகப்பெரிய பிரச்சனையைத் தீர்க்க கூகுள் மேப்ஸ் செயலியில் ஃபளைஓவர் அலர்ட் என்ற வசதியை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது கூகுள். இந்த ஃபிளைஓவர் வசதி மூலம் நாம் மேலே செல்ல வேண்டுமா அல்லது ஃபிளைஓவருக்கு கீழே செல்ல வேண்டுமா என்பதனை மேப்ஸே தெளிவாகக் கூறிவிடும். அதேபோல் கூகுள் மேப்ஸ் விரைவில் பல அசத்தலான அம்சங்களைக் கொண்டுவர உள்ளது.