For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Miss World: நடப்பாண்டின் உலக அழகியாக மகுடம் சூடினார் செக் குடியரசு பெண்!

06:31 AM Mar 10, 2024 IST | 1newsnationuser3
miss world  நடப்பாண்டின் உலக அழகியாக மகுடம் சூடினார் செக் குடியரசு பெண்
Advertisement

Miss World: நடப்பாண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் வென்றுள்ளார்.

Advertisement

71வது உலக அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் உலக அழகிப் போட்டி இதுவாகும். இதன் இறுதி போட்டிக்கு, இந்தியாவை சேர்ந்த சினி ஷெட்டி உள்பட 14 பேர் தகுதி பெற்று இருந்தனர். இந்தியாவை தவிர்த்து மங்கோலியா, அயர்லாந்து, எஸ்தோனியா, வடக்கு அயர்லாந்து, இந்தோனேசியா, ஹங்கேரி, நெதர்லாந்து, போர்ச்சுகல், வேல்ஸ், துனிசியா, போட்ஸ்வானா, கவுதமாலா, ஜிப்ரால்டர் நாடுகளை சேர்ந்த அழகிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர்.

இந்தநிலையில், நேற்று மாலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் உலகி அழகியாக அறிவிக்கப்பட்டார். இவர் 117 நாடுகளைச் சேர்ந்த அழகிகளை எதிர்த்து போட்டியிட்டார். இந்த போட்டியில் லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஸைத்தோன் முதல் ரன்னராக அறிவிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு உலகி அழகிப் பட்டம் வென்ற போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பிலாவ்ஸ்கா கிறிஸ்டினாவுக்கு மகுடம் சூட்டி கவுரவித்தார். 24 வயதாகும் கிறிஸ்டினா, மாடலாக இருந்து கொண்டே, சட்டம் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய இரண்டிலும் டிகிரி படித்து வருகிறார். இந்த ஆண்டு உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட சினி ஷெட்டி என்ற பெண், லெபனான் அழகி யாஸ்மினிடம் தோல்வியடைந்து பாதியிலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக உலக அழகி பட்டத்தை இதுவரை 6 முறை இந்தியா வென்று உள்ளது. இந்தியாவை சேர்ந்த ரீட்டா பரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹெய்டன் (1997), யுக்தா முகி (1999), பிரியங்கா சோப்ரா (2000) மற்றும் மனுஷி சில்லார் (2017) ஆகியோர் உலக அழகி பட்டத்தை வென்றிருந்தனர்.

Readmore: முதல்வர் ஸ்டாலினுக்கு இதுகூட தெரியல!… சுட்டிக்காட்டி விமர்சித்த Annamalai!

Tags :
Advertisement