அடேங்கப்பா..!! ஒரே நாளில் ரூ.16,000 குறைந்தது..!! நகைக்கடைக்கு படையெடுக்கும் மக்கள்..!!
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால், நகைக்கடைகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதமாக குறைத்தது. இதேபோன்ற நடவடிக்கையை தற்போது நேபாள அரசும் எடுத்துள்ளது. நேபாள அரசு தங்கத்தின் மீதான சுங்க வரியை சரிபாதியாகக் குறைத்துள்ளது. அதாவது, தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரியை 20%இல் இருந்து 10%ஆக குறைத்துள்ளது. இதன் காரணமாக அங்கு தங்கத்தின் விலை தோலா ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் குறைந்துள்ளது.
ஒரு தோலா தங்கம் : இந்தியாவில் தங்கம் சவரன் (பவுன்) என அளவிடப்படுவதைப் போல, நேபாளத்தில் தோலா என குறிப்பிடப்படுகிறது. ஒரு தோலா தங்கம் என்பது 11.7 கிராம். நேபாளத்தில் ஹால்மார்க் தங்கத்தின் விலை கடந்த 24ஆம் தேதி தோலா ஒன்றுக்கு ரூ.1,67,200 என விற்பனையான நிலையில், 25ஆம் தேதி ரூபாய் 1,51,300 ஆக குறைந்தது. நேபாள அரசு சுங்க வரியை பாதியாக குறைத்ததைத் தொடர்ந்து, தங்கம் விலை ஒரு தோலா ரூ.15,900 குறைந்துள்ளது.
இரண்டு நாட்களில் மேலும் 2 ஆயிரம் ரூபாய் விலை குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நேபாளத்தில் ஒரு தோலா ஹால்மார்க் தங்கம் ரூ.1,49,299-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைவால், மக்கள் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Read More : ஆதார் அட்டையை இலவசமாக டவுன்லோடு செய்வது எப்படி..? ரொம்ப ஈசியான வழி இதோ..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!