என்ன சொல்றீங்க.? கால் பாத அமைப்பிற்கும் உங்க குணத்திற்கும் சம்பந்தம் இருக்கா.? ஆச்சரியமான தகவல்களுடன்.!
ஒரு மனிதரின் குணங்களை வைத்தே அவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஒரு மனிதரின் குணங்களையும் பெர்சனாலிட்டியையும் மதிப்பீடு செய்வதற்கு பல அளவுகோல்கள் இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ஆப்டிகல் இல்யூஷன் என்ற முறை ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. தற்போது ஒருவரின் பாத அமைப்பை வைத்து அவரது குணங்கள் மற்றும் பெர்சனாலிட்டியை ஓரளவு மதிப்பீடு செய்ய முடியும் என மனோ தத்துவ நிபுணர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
ஒருவரின் பெர்சனாலிட்டியை அறிந்து கொள்வதற்கு பாதங்களின் அமைப்பு பொறுத்து நான்கு வகைகளாக பிரித்திருக்கிறார்கள். இதில் முதல் வகை என்பது எகிப்திய பாதங்கள் அமைப்பு முறையாகும். இந்தப் பாத அமைப்பை கொண்டிருப்பவர்களுக்கு கால் பெருவிரல் பெரியதாக இருக்கும் மற்ற விரல்கள் இதனைத் தொடர்ந்து ஒன்றை விட ஒன்று சிறியதாக இருக்கும். இந்தப் பாத அமைப்பை பெற்றிருப்பவர்களுக்கு தற்பெருமை அதிகமாக இருக்கும். இவர்கள் பிறர் தங்கள் மீது அதிக அன்பு செலுத்த வேண்டும் மற்றும் தங்களை எப்போதும் அக்கறை எடுத்து பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். மேலும் எந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் மீண்டு வரும் திறமை இவர்களுக்கு இருக்கிறது.
ரோமன் பாத அமைப்பை கொண்டவர்களுக்கு கால்களில் முதல் மூன்று விரல்கள் நீளமாக இருக்கும். இவர்கள் பிற இடங்கள் கலாச்சாரம் மற்றும் புதிய மனிதர்களைப் பற்றி அரிய விரும்பும் நபர்களாக இருப்பார்கள். நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். மேலும் இவர்கள் சாகசங்களை அதிகம் விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். மூன்றாவதாக கிரேக்க பாத அமைப்பை கொண்டவர்கள் தலைமை பண்பிற்கு உரியவர்கள். கால் கட்டைவிரலை விட இரண்டாவது விரல் நீளமானதாக இருக்கும் பாத அமைப்பு கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்களைச் சுற்றி எப்போதுமே ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும் எப்போதும் நகைச்சுவை உணர்வுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மனதிற்கு தோன்றியதை ஒளிவு மறைவின்றி பேசுவதால் சில நேரங்களில் பிரச்சனைகளிலும் சிக்கிக் கொள்வார்கள்.
பீசன்ட் பாத அமைப்பு அதாவது உழவர் பாத அமைப்பை கொண்டவர்கள். 5 கால் விரல்களும் ஒரே அளவில் இருக்கும் பாத அமைப்பை உடையவர்கள். இவர்கள் எப்போதும் அமைதியை விரும்பக் கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாகவும் அதிக பாசம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அதிக யோசிக்கும் திறன் கொண்டவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள். ஒட்டக பாத அமைப்பு கொண்டவர்கள் ஏதாவது இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களால் ஒரு இடத்தில் நிலையாக இருக்க முடியாது. ஏதேனும் புதிய விஷயங்களைத் தேடி நடந்து கொண்டே இருப்பார்கள்.