உங்கள் தலைமுடி வால் மாதிரி மெலிந்து இருக்கா? இதை செய்யுங்க, உங்களுக்கே வித்தியாசம் தெரியும்...
ஒரு சில பெண்களின் முடி, மிகவும் மெலிந்து பொலிவு இல்லாமல் காணப்படும். இதுவே அவர்களுக்கு பெரும் கவலையாக மாறிவிடும். ஆம், அதுவும் தற்போது உள்ள காலகட்டத்தில், பெரும்பாலான பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் உள்ளது. இதற்க்கு மரபணு, ஹார்மோன் சமநிலை இல்லாமல் இருத்தல், மன அழுத்தம், அவர்கள் உட்கொள்ளும் மருந்துகள் போன்ற பல காரணங்கள் இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம். குறிப்பாக, ஹீட் ஸ்டைலிங் சாதனங்களை அதிகம் பயன்படுத்துவது, அதிக கெமிக்கல் நிறைந்த டை பயன்படுத்துவது தான் தலைமுடி மெலிந்து போக முக்கிய காரணமாகலாம். இதற்காக பலர் பல ஆயிரங்களை செலவு செய்வது உண்டு. ஆனால், இனி நீங்கள் கவலை பட வேண்டாம். இயற்கையாகவே தலைமுடி மெலிந்து போவதை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இதற்க்கு முதலில், நீங்கள் உங்கள் உணவில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். இதற்க்கு நீங்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஜிங்க் மற்றும் பயோடின் ஆகியவை நிறைந்த வஞ்சிரம் மீன், வால்நட் மற்றும் முட்டைகளை அதிகம் சாப்பிட வேண்டும். மேலும், வைட்டமின் D, இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும். நீங்கள் அடிக்கடி ஹேர் கலரிங் மற்றும் ப்ளீச் செய்வதை நிறுத்தி விட்டாலே பாதி பிரச்சனை முடிந்து விடும். நீங்கள் அளவுக்கு அதிகமாக கெமிக்கல்களை பயன்படுத்தினால், மயிர்க்கால்கள் சேதமடைந்து, தலைமுடி அதிகம் கொட்டி விடும்.
புளித்த தயிரில், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இதனால், புளித்த தயிரை மயிர்க்கால்களில் தேய்த்தால், கூந்தலுக்கு தேவையான போஷாக்குகள் கிடைத்து விடும். இதனால் கூந்தல் வலுவாக இருக்கும். உங்களுடைய மயிர்கால்களை எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்வது ஒரு நல்ல தீர்வாக இருக்கும். இதனால், தலையில் ரத்த ஓட்டம் அதிகரித்து, முடி நன்கு வளரும். இதற்கு நீங்கள் உங்களுடைய விரல் நுனிகளை பயன்படுத்தி தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் தலைமுடி மற்றும் மயிர் கால்களை மசாஜ் செய்ய வேண்டும்.
மன அழுத்தம் அதிகம் இருந்தாலும் முடி அதிகம் கொட்டிவிடும். இதனால் மன அமைதி மிகவும் முக்கியம். தினமும் குறைந்தது 1௦ நிமிடம் ஆவது யோகா செய்வது நல்லது.
Read more: உடற்பயிற்சி இல்லாமலே ஒரே மாதத்தில் 10 கிலோ எடை குறைக்கலாம்.. இதை மட்டும் செய்யுங்க..