For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகமே...! காலை 10 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...! அலர்ட் கொடுத்த வானிலை மையம்...!

The Chennai Meteorological Department has said that moderate rain is likely in 19 districts.
07:31 AM Jul 18, 2024 IST | Vignesh
தமிழகமே     காலை 10 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு     அலர்ட் கொடுத்த வானிலை மையம்
Advertisement

19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 16-ம் தேதி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய விதர்பா நில பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவியது. இதற்கிடையே, ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஜூலை 19-ம் தேதி உருவாக வாய்ப்புள்ளது.

Advertisement

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் மிதமான மழை பெய்யக்கூடும்.

வடக்கு அந்தமான், ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல்,கர்நாடக கடலோர பகுதிகள், கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகபட்சமாக மணிக்கு 55 முதல் 65 கிமீவேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tags :
Advertisement