நடக்காத கார் ரேஸ் - செலவு செய்த ரூ.8 கோடி 25லட்சத்தை தமிழக அரசிடம் கேட்கும் சென்னை மாநகராட்சி..!
ஃபார்முலா 4 கார் ரேஸ் கடந்த ஆண்டு டிசம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டது. இதற்காக ஒட்டுமொத்தமாக ரூ.13 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்காக ரூ.6 கோடியே 42 லட்சம் முதற்கட்டமாக தமிழக அரசிடம் இருந்து வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மழை வெள்ளத்தால் சென்னை தீவுத்திடலைச் சுற்றி நடக்க இருந்த பார்முலா 4 கார் ரேஸ் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு தர வேண்டிய, மீதமுள்ள ரூ.7 கோடியே 25 லட்சத்திற்கான தொகையை வழங்காமல் இருந்த நிலையில், அந்த தொகைக்கான வட்டியுடன் சேர்த்து ரூ. 8கோடியே 25 லட்சத்தை, நடக்காத ஃபார்முலா 4 கார் ரேஸ்க்கு செலவு செய்த தொகையை தமிழக அரசு தர வேண்டும் என கேட்டு சென்னை மாநகராட்சி தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
Read More: சாதிவாரி கணக்கெடுப்பு..!! சட்டப்பேரவையில் தீர்மானம்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி..!!