For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜிஎஸ்டியில் வந்த மாற்றம்..!! இனி ஆடைகள், மிதிவண்டிகள், ஷூக்களின் விலை தாறுமாறாக உயரப்போகுது..!!

It has been decided to impose a 5% tax on textile products if their price is up to Rs. 1,500.
01:40 PM Dec 04, 2024 IST | Chella
ஜிஎஸ்டியில் வந்த மாற்றம்     இனி ஆடைகள்  மிதிவண்டிகள்  ஷூக்களின் விலை தாறுமாறாக உயரப்போகுது
Advertisement

ஜிஎஸ்டி விகிதங்களை முறைப்படுத்த ஜிஓஎம் குழு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு ஜவுளி உட்பட 150 பொருட்கள் மற்றும் சேவைகளை மறுசீரமைக்க பரிந்துரை செய்துள்ளது. புகையிலை மற்றும் புகையிலை பொருட்களுக்கு தற்போதைய 28%-க்கு பதிலாக 35% விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜவுளி, மிதிவண்டிகள், உடற்பயிற்சி புத்தகங்கள் ஆகியவற்றின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

ஜவுளிப் பொருட்களுக்கான விலை ரூ.1,500 வரை இருந்தால் அதற்கு 5% வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ரூ.1,500 முதல் ரூ.10 ஆயிரம் வரையிலான பொருட்களுக்கு 18% வரியை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது. ரூ.10,000-க்கு மேல் உள்ள ஜவுளிகளுக்கு, 28% வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ரூ.25,000-க்கு மேல் விலையுள்ள கைக்கடிகாரங்களுக்கான ஜிஎஸ்டியை 18%இல் இருந்து 28%ஆக அதிகரிக்க GoM முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், ரூ.15,000-க்கு மேல் விலையுள்ள ஷூக்களும் வரி உயர்வு விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான சைக்கிள்களுக்கான ஜிஎஸ்டியை 12%இல் இருந்து 5%ஆக குறைக்க முன்மொழிந்துள்ளது.

காற்று நிரப்பப்பட்ட பானங்கள், சிகரெட்டுகள், புகையிலை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 35% உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக ஜிஎஸ்டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு 148 பொருட்களுக்கான வரி விகிதங்களை மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவுகள் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஆலோசனை செய்யப்பட்டு இறுதி செய்யப்படும். ஜிஎஸ்டி கவுன்சில் முடிவிற்கு பிறகே இந்த வரி விகிதங்கள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : மனைவியை காருக்குள் வைத்து தீவைத்து எரித்துக் கொன்ற கொடூர கணவன்..!! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

Tags :
Advertisement