மனைவியை காருக்குள் வைத்து தீவைத்து எரித்துக் கொன்ற கொடூர கணவன்..!! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பத்மராஜன். இவர், பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மனைவி அனிலா. இந்த பேக்கரியை, பார்ட்னர் ஒருவருடன் இணைந்து அனிலா நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கணவர் பத்மராஜன், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு அனிலா பேக்கரியை வழக்கம்போல் மூடிவிட்டு, தனது காரில் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த கணவர் பத்மராஜன், அனிலாவின் காரை வழிமறித்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் சீட் பெல்ட் அணிந்திருந்த அனிலா, உடல் கருகி காருக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில், காரில் அனிலாவுடன் பயணம் செய்த பெண் பணியாளர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். பின்னர், போலீசார் விரைந்து வந்து அனிலாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து தீக்காயங்களுடன் நின்றிருந்த பணிப்பெண் சோனி என்பவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அனிலாவின் கணவர் பத்மராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : மன அழுத்தம், படபடப்பை குறைக்கும் கற்பூரவள்ளி இலை..!! இத்தனை மருத்துவ குணங்கள் இருக்கா..?