For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முடங்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டம்? நிதி ஒதுக்காமல் தமிழகத்தை தவிக்க விடும் மத்திய அரசு..! RTI-யில் அம்பலமான ஷாக் தகவல்!

11:41 AM May 14, 2024 IST | Mari Thangam
முடங்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டம்  நிதி ஒதுக்காமல் தமிழகத்தை தவிக்க விடும் மத்திய அரசு    rti யில் அம்பலமான ஷாக் தகவல்
Advertisement

சென்னையோடு சேர்த்து அறிவிக்கப்பட்ட நாக்பூர், பெங்களூரு, கொச்சி மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருக்கும் மத்திய அரசு தமிழ்நாட்டு மட்டும் நிதி ஒதுக்காமல் சென்னை மெட்ரோவை புறக்கணித்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கொள்ளப்படும் இந்த இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்து.

2021-22 பட்ஜெட்டில் சென்னையுடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 14 ஆயிரத்து 788 கோடி ரூபாய் நிதியும், கொச்சி மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு ஆயிரத்து 957 கோடி ரூபாய் நிதியும், நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 5 ஆயிரத்து 976 கோடி ரூபாய் நிதியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னையை தவிர, இதர மூன்று மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மட்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது. அதன்படி, கொச்சி, பெங்களூரு, நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு, மொத்தமாக 18 ஆயிரத்து 978 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, கடந்த 2022 நவம்பர் மாதத்தில் கொச்சி மெட்ரோ திட்டப் பணிகளுக்காகவும், 2022 டிசம்பர் மாதத்தில், நாக்பூர் மெட்ரோ பணிகளுக்காகவும் அதையடுத்து பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்துக்காகவும் சேர்த்து மொத்தம் ரூ.18,978 கோடியை மத்திய அரசு அறிவித்தபடியே வழங்கியிருக்கிறது.

ஆனால், சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக அறிவிக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதி அளவைக்கூடத் தராமல் முற்றிலுமாகப் புறக்கணித்திருப்பது ஆர்.டி.ஐ தகவலில் அம்பலமாகியிருக்கிறது. இது சென்னை உள்ளிட்ட தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மூன்றாண்டுகளாக நிதி வழங்காததால் சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் பாதியில் முடங்கும் அபாயம் ஏற்பட்டியிருக்கிறது.

Tags :
Advertisement