10 லட்சம் மக்களின் உயிரை காவு வாங்கிய முகாம்..!! உலகையே நடுங்க வைத்த அந்த சம்பவம்!! நடந்தது என்ன?
‘மரணத்தின் நுழைவாயில்’ என்று அழைக்கப்படும் இடம் பற்றியும், அங்கு 10 லட்சம் பேர் எப்படி கொல்லப்பட்டனர் என்பது குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வரலாறு படித்தவர்களுக்கு நிச்சயம் ஹிட்லரை பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். ஜெர்மனியின் பயங்கரமான சர்வாதிகாரியாகவும், யூதர்களின் எதிரியாகவும் இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லரின் நாஜிக்களின் ராணுவத்தால் கட்டப்பட்ட சித்ரவதை முகாம்களில் சுமார் 10 லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் பெரும்பாலனவர்கள் யூதர்கள் என்று கூறப்படுகிறது. போலந்தில் அமைக்கப்பட்ட இந்த முகாம் ஆஷ்விட்ஸ் முகாம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஆஷ்விட்ஸ் முகாமிற்கு வெளியே மிகப் பிரம்மாண்டமான ஒரு இரும்புக் கதவு இருந்தது. இது ‘மரணத்தின் நுழைவாயில்’ அல்லது ‘மரணத்தின் கதவு’ என்று அழைக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான யூதர்கள் ஆட்டுமந்தைகளை போல ரயில்களில் அழைத்து வரப்பட்டு இந்த கதவு வழியாக தான் சித்ரவதை முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த முகாம்களில் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இந்த முகாமிற்கு ஒருவர் சென்றால், அவர் திரும்புவதற்கு வாய்ப்பே இல்லை. யாரும் தப்பிக்க முடியாத வகையில் அந்த முகாம் கட்டப்பட்டது. இந்த முகாம்களில் இருந்த யூதர்களுக்கு அங்கிருந்த அரசியல் எதிரிகள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்களால் பலவகையான கொடுமைகள் இழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் எரிவாயு அறைக்குள் அனுப்பப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டனர். இந்த எரிவாயு அறைகளில் லட்சக்கணக்கான மக்கள் உயிருடன் எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த முகாமில் இருந்த ஒரு சுவர் மரணத்தின் சுவர் என்று அழைக்கப்படுகிறது. இந்த சுவருக்கு அருகில் ஆயிரக்கணக்கான யூதர்களை நாஜிக்கள் சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய கொடூரங்கள் அரங்கேறிய ஆஷ்விட்ஸ் முகாம் 1947ஆம் ஆண்டும் போலந்து நாடாளுமன்றத்தால் அரசு அருங்காட்சியமாக மாற்றப்பட்டது. யூதர்களின் தலைமுடி, காலணிகள், உள்ளிட்ட பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Read more ; ‘தீ பரவியதாக வந்த குரல்..’ஓடும் ரயிலில் இருந்து குதித்த பயணிகள்!! பரிதாபமாக உயிரிழந்த 3 பேர்!!