கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு..!! சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!
கொல்கத்தாவில் முதுகலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐ விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு உள்ள கருத்தரங்கு அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பணியில் இருந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் அரை நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் பலாத்கார காயங்கள் இருந்தன. பிரேதபரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று இந்த கொலை தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஜூனியர் மருத்துவர்கள் நேற்று போராட்டம் நடத்தினார்கள். இதனால் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டது. இடதுசாரி மாணவர் அமைப்பினரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை விசாரணை செய்தது. பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி, இந்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவக் கல்லூரி முதல்வரைத்தான் முதலில் விசாரித்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தது.
மேலும், அவர் பதவி விலகிய ஒருமணிநேரத்தில் மீண்டும் மற்றொரு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அவர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். மேலும், பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
Read more ; மனுபாக்கர் – நீரஜ் சோப்ரா திருமணம்..!! வதந்திகளுக்கு முற்றிப்புள்ளி வைத்த மனுபாக்கர் தந்தை..!!