முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'அவர்கள் சந்தோஷமா இருக்குறது எனக்கு பிடிக்கல’..!! 3 வயது சிறுவனை கொன்ற பெண் பரபரப்பு வாக்குமூலம்..!!

The body of the boy was lying in a sack in the house of a woman named Thangammal who was in the opposite house.
07:59 AM Sep 10, 2024 IST | Chella
Advertisement

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்துக்குறிச்சி கிராமத்தில் விக்னேஷ்-ரம்யா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது 2-வது குழந்தை சஞ்சய் (வயது 3). இந்த சிறுவன் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென மாயமாகியுள்ளான். உடனடியாக அருகில் உள்ள வீடுகளில் பெற்றோர் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால், போலீசில் புகாரளித்தனர்.

Advertisement

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுவனை தேடி வந்தனர். அப்போது எதிர் வீட்டில் இருந்த தங்கம்மாள் என்ற பெண்ணின் வீட்டில் சாக்கு மூட்டையில் சிறுவனின் சடலம் கிடந்துள்ளது. அந்த பெண்ணே சிறுவனை கொன்றதாக கூறப்படுகிறது. போலீசார் வருவதை பார்த்ததும் அந்த பெண் ஓடிச் சென்று வேறொரு வீட்டில் பதுங்கிக் கொண்டார். பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தின் பின்னணி குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தங்கம்மாளின் மகன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால், அவர் சற்று மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும் எதிர் வீட்டில் இருந்த விக்னேஷ்-ரம்யா தம்பதி தங்கம்மாளின் மகனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது. ஏற்கனவே தங்கம்மாளுக்கும் எதிர் வீட்டில் உள்ளவர்களுக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்துள்ளது.

இவ்வாறான சம்பவங்களின் நீட்சியாகவே இந்த கொலையும் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கைதான பெண் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ”தனது மகன் விபத்தில் இறந்ததால் மன அழுத்தத்தில் இருந்தேன். நான் வருத்தத்தில் இருக்கும்போது எதிர்வீட்டினர் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்வதை பொறுக்க முடியவில்லை” என்று கூறியிருக்கிறார். இச்சம்பவம் குறித்து அப்பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Read More : இந்த ராசிக்காரர்கள் உஷாரா இருங்க..!! எல்லா பிரச்சனையும் வரப்போகுது..!!

Tags :
காவல்துறைசிறுவன்நெல்லை மாவட்டம்
Advertisement
Next Article