கை, கால்கள் கட்டப்பட்டு சாலையோரம் கிடந்த இளைஞரின் சடலம்..!! காதல் ஜோடியாக போலீசிடம் தஞ்சம் அடைந்த நிலையில் கொடூரம்..!!
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் சாலையோரம் கை, கால்கள் கட்டப்பட்டு பல வெட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் உடல் கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், இச்சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில், சேலையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெயர் சூர்யா என்பதும், அவர் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி என்பதும் தெரியவந்தது.
இவர், சேலையூரில் எலெக்ட்ரீயசனாக வேலை பார்த்து வந்துள்ளார். சூர்யாவுக்கு வயது 25. தான் காதலித்து வந்த பெண்ணுடன் சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததாகவும், அங்கு அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Read More : “சீமானுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன்”..!! ”சும்மா விட மாட்டேன்”..!! டிஐஜி வருண்குமார் எச்சரிக்கை..!!