முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாஜக கூட்டணிக்கு மொத்தம் 303 முதல் 323 இடங்கள் கிடைக்கும்...! பிரசாந்த் கிஷோர் உறுதி...!

06:10 AM May 26, 2024 IST | Vignesh
Advertisement

பாஜக கூட்டணிக்கு மொத்தம் 303 முதல் 323 இடங்கள் கிடைக்கும் என பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்.

Advertisement

2024 லோக்சபா தேர்தலில் பாஜக 272 ஐ தாண்டாது. காற்று பலமாக வீசினால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம் என அரசியல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் குறித்த யோகேந்திர யாதவின் தேர்தல் கணிப்பு குறித்து, பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறுகையில், நாட்டில் தேர்தல் மற்றும் சமூக-அரசியல் பிரச்சினைகளைப் புரிந்துகொள்பவர்களில் நம்பகமான முகமான யோகேந்திர யாதவ், 2024 மக்களவைத் தேர்தல் குறித்த தனது இறுதி மதிப்பீட்டை தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் பாஜக 240-260 இடங்களையும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 35-45 இடங்களையும் பெறலாம் என்று பிரசாந்த் கிஷோர் கூறினார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 275 முதல் 305 இடங்கள் வரை கிடைக்கும். நாட்டில் ஆட்சி அமைக்க, 272 இடங்கள் தேவை, பாஜக கூட்டணிக்கு மொத்தம் 303 முதல் 323 இடங்கள் கிடைக்கும். இப்போது யாருடைய அரசாங்கம் அமைக்கப்படுகிறது என்பது ஜூன் 4 ஆம் தேதி தெரியும் என தனது எக்ஸ் தளத்தில் பிரசாந்த் கிஷோர் பதிவிட்டுள்ளார்.

Tags :
BJPnda alliancePrashant Kishore
Advertisement
Next Article