For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மக்களே...! நாடு முழுவதும் அமலுக்கு வந்தது 3 குற்றவியல் சட்டங்கள்...!

The 3 criminal laws of the central government came into force across the country from today.
06:05 AM Jul 01, 2024 IST | Vignesh
மக்களே     நாடு முழுவதும் அமலுக்கு வந்தது 3 குற்றவியல் சட்டங்கள்
Advertisement

மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.

இந்திய தண்டனைச் சட்டம்- 1860, இந்திய சாட்சியச் சட்டம்- 1872, குற்றவியல் நடைமுறைச் சட்டம் - 1983 ஆகியவற்றை ரத்து செய்து, 2023 டிசம்பர் 25 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன், பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா -2023 (இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம்), பாரதிய நியாய சன்ஹிதா - 2023 (இந்திய நியாயச் சட்டம்) மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் (இந்திய சாட்சியச் சட்டம்) ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டது. சட்டத்துறையில் காலனித்துவ தடயங்களை அகற்றுவதற்கும், இந்திய மதிப்புகள் மற்றும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்பவும் இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Advertisement

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா, கடந்த மக்களவையில் இந்திய குற்றவியல் (இரண்டாவது) சட்ட மசோதா, 2023, இந்திய குற்றவியல் நடைமுறை (இரண்டாவது) சட்ட மசோதா, 2023 மற்றும் இந்திய ஆதார (இரண்டாவது) சட்ட மசோதா, நாடாளுமன்ற. விவாதத்திற்குப் பிறகு அவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

மொத்தம் 484 பிரிவுகளைக் கொண்ட சிஆர்பிசிக்கு மாற்றாக இருக்கும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா இப்போது 531 பிரிவுகளைக் கொண்டிருக்கும். 177 பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன, 9 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன, 14 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐபிசிக்கு மாற்றாக இருக்கும் பாரதிய நியாய சன்ஹிதாவில் முந்தைய 511 பிரிவுகளுக்கு பதிலாக இப்போது 358 பிரிவுகள் இருக்கும். அதில் 21 புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, 41 குற்றங்களில் சிறைத்தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது‌.

மேலும் 82 குற்றங்களில் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது, 25 குற்றங்களில் கட்டாய குறைந்தபட்ச தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, 6 குற்றங்களில் தண்டனையாக சமூக சேவை விதிகள் உள்ளன, 19 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல், ஆதாரச் சட்டத்திற்கு மாற்றாக வரும் பாரதிய சாக்ஷயா மசோதாவில், முந்தைய 167 பிரிவுகளுக்குப் பதிலாக இப்போது 170 பிரிவுகள் இருக்கும், 24 பிரிவுகள் திருத்தப்பட்டுள்ளன, 2 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன, 6 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags :
Advertisement