10ஆம் வகுப்பு போதும்.. தமிழக சத்துணவுத் துறையில் 8,997 காலிப்பணியிடங்கள்..!!
தமிழ்நாட்டில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் புதிதாக 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 8,997 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை மட்டும் மாதம் ரூ.3,000 தொகுப்பூதியத்தில் நிரப்ப அனுமதி அளிக்கப்படுகின்றது. சமூக நல ஆணையகரத்தின் கோரிக்கையை ஏற்று இந்த அனுமதி வழங்கப்படுகிறது. தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களில் 12 மாதங்கள் திருப்திகரமாகப் பணியை முடிக்கும் நபர்களுக்குச் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் 8,997 சமையல் உதவியாளர் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு நியமனம் செய்யப்படும் பணியாளர்களின், 12 மாதங்கள் திருப்திகரமாக பணி முடிக்கும் தகுதியானவர்களுக்கு சிறப்பு காலமுஐ ஊதியம் வழங்கப்படும். சிறப்பு கால முறை ஊதிய நிலை - 1 (ரூ.3,000 - ரூ.9,000) வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ரூ.26.77 கோடி செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; “பூஜை செய்ய வந்த இடத்தில், பூசாரி செய்த வேலை”; வெளுத்து வாங்கிய பக்தர்கள்..