முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

PM கிசான் திட்டத்தின் 18வது தவணை இன்னும் பெறவில்லையா..? அப்போ உடனே இத பண்ணுங்க...

The 18th tranche of PM Kisan Yojana was released a few days ago. Now let's see in detail what the farmers who don't get Rs. 2000 can do.
05:15 PM Oct 13, 2024 IST | Mari Thangam
Advertisement

பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டம் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6 ஆயிரம் என மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இப்பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் விதமாக ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இடைத்தரகர்கள் உள்ளிட்ட எந்த இடையூறும் இல்லாமல் இப்பணம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

Advertisement

18 வது தவணை : இந்நிலையில் அக்டோபர் 5 ஆம் தேதி பிஎம் கிசான் திட்டத்தின் 18-வது விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தவணை பணத்தை பெறுவதற்கு கேஒய்சி செயல்முறையை நிறைவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. இதனை முடித்த விவசாயிகளுக்கு மட்டுமே பணம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

பணம் கிடைக்காத விவசாயிகள் உடனடியாக இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும். கடந்த 5-ம் தேதி பணம் விடுவிக்கப்பட்ட நிலையில் அருகிலுள்ள வீட்டில் இருந்தபடி பி.எம் கிஷான் அதிகாரப்பூர்வை இணையதளத்திலோ அல்லது பொது சேவை மையத்திற்கு நேரில் சென்ற உடனடியாக இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்கலாம்.

எப்படி சரிபார்ப்பது? இதற்கு முதலில் பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் சென்று Beneficiary list என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மாநிலம், மாவட்ட மற்றும் கிராம உள்ளிட்ட விவரங்களை நிரப்ப வேண்டும். அதன் பிறகு get report என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பயனாளர்கள் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். இதைத்தொடர்ந்து பி.எம் கிசான் ஹெல்ப்லைன் டெஸ்க் மூலம் புகார் தெரிவிக்கலாம். இதற்கு pm.kisan-funds@gov.in, pm.kisan-ict@gov.in என்ற இணையதள முகவரியில் புகார் தெரிவிக்கலாம். அல்லது 011-24300606, 155261 என்ற தொலைபேசி நபர்களுக்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் அல்லது பி.எம் கிசான் இலவச டோல் ஃப்ரீ நம்பர் ஆன 1800-115-526 என்ன நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம்.

Read more ; பூண்டு அதிகம் சாப்பிட்ட பெண்ணிற்கு நேர்ந்த கதி..!! இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்..!!

Tags :
central govtfarmersPM Kisan YojanaPM Modi
Advertisement
Next Article