’தாமிரபரணி’ திரைப்பட நடிகை பானுவா இது..? குழந்தையுடன் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!!
02:17 PM Dec 09, 2023 IST
|
1newsnationuser6
Advertisement
மலையாள படங்களில் நடித்து வந்த நடிகை பானு, விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான தாமிரபரணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே கோலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்தார்.
Advertisement
ஆனால், அந்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. கடைசியாக பானு, தமிழில் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தில் நடித்தார். பானு கடந்த 2015ஆம் ஆண்டு ரிங்கு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கியாரா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நடிகை பானு தனது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Next Article