தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச்சூடு!. 40 விவசாயிகள் சுட்டுக்கொலை!. நைஜீரியாவில் பயங்கரம்!.
Terrorists: நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால், விவசாயிகள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் ஆயுதமேந்திய கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. பழமைவாதிகளான இவர்கள் மேற்கத்திய கலாசார தழுவலை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். விவசாயத்தில் நவீனமயமாதலை கொண்டு செயல்பட்டு வரும் விவசாயிகள் வசிக்கும் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்தநிலையில், அங்கு போர்னோ மாகாணத்தின் மோகுன்னே கிராமத்துக்குள் புகுந்த ஆயுதமேந்திய கும்பல் ஒன்று அங்குள்ள விவசாயி்களை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 40 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உடலில் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கிராமங்களை குறிவைத்து பெரும்பாலான தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் தான் சாட் ஏரிக்கரை பகுதியில் விவசாயிகள் சுற்றி வளைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Readmore: கையெழுத்துப்போட்ட பிறகு கீழே ஒரு கோடு போடுகிறீர்களா?. இதைச் செய்வது சரியா?. தவறா?