அச்சுறுத்தும் வாக்கிங் நிமோனியா!. 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை பாதிப்பதாக எச்சரிக்கை!. சுகாதாரத்துறை!
Walking pneumonia: 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளிடையே வாக்கிங் நிம்மோனியா பாதிப்பு அதிகரித்துள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
குளிர்கால சீசனையொட்டி, கேரளாவில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு சுவாச தொற்று அதிகமாக பாதிக்கப்படுவதாகவும், இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் அடிக்கடி ஏற்படுவதாகவும், இதற்கு நிமோனியா நோய் தொற்று உள்ளதா என்பதை அடையாளம் காண ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த நோய் அதிகம் தாக்கி வருவதாகவும், கடந்த இரண்டு மாதங்களில் வாக்கிங் நிமோனியா பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், ஒரு குழந்தைக்கு மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல், எருமை, சளி ஆகியிருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுநாள் வரை 5 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த வாக்கிங்க் நிமோனியா பாதிப்பு முதலில் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது 5 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள மருத்துவர்கள் கூறுகிறார்கள். அரிதாக பெரியவர்களையும் சில நேரம் இந்த நிமோனியா தாக்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வாக்கிங்க் நிமோனியாவின் அறிகுறிகள் லேசான காய்ச்சல், நீடித்த இருமல், மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை வலி, தோலில் தடிப்புகள் ஆகியவை ஏற்படும். இருமல் 5 நாட்களுக்கு மேலாக நீடித்தால் மருத்துவரை உடனடியாக சென்று ஆலோசனை பெறுவது அவசியம் எனவும் சுகாதாரத்துறை வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மைக்கோபிளாஸ்மா பாக்டீரியா, பெரும்பாலானோருக்கு நுரையீரல் தொற்றை ஏற்படுத்தக்கூடியது. பாதிக்கப்பட்ட நபர் இருமும் போதும் தும்மும் போது வெளியேறும் எச்சில் துளிகள் மற்றும் மூச்சுக்காற்று மூலமாக இந்த நோய் பரவக்கூடியது. எனவே இத்தகைய அறிகுறிகள் இருக்கும் குழந்தைகள் மாஸ்க் அணிவது அவசியம் என்று கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Readmore: ரஷ்யா – உக்ரைன் போர்; அடிபணிந்த புதின்!. டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்!. வெளியான அறிவிப்பு!