For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. கோலாகலமாக நடந்து முடிந்த திருமணம்..!! அசாமில் நெகிழ்ச்சி..

Love blossomed in an Assam nursing home
10:32 AM Jan 27, 2025 IST | Mari Thangam
முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்   கோலாகலமாக நடந்து முடிந்த திருமணம்     அசாமில் நெகிழ்ச்சி
Advertisement

அசாம் மாநிலம் கோலாகட் மாவட்டத்தில் அமைந்துள்ளது போககாட் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் பத்மேஸ்வர் கோலா.. இவருக்கு 71 வயதாகிறது.. இன்னும் திருமணமாகவில்லை. தன்னுடைய 2 சகோதரர்கள் ஆதரவில்தான் இருந்து வந்தார். கடந்த வருடம் இவரது 2 சகோதரர்களும் இறந்துவிட்ட நிலையில், பெல்டோலா பகுதியிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.

Advertisement

அதேபோல, சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேஜ்பூரை சேர்ந்தவர் ஜெயபிரபா என்ற மூதாட்டி.. குடும்ப சூழ்நிலைகள் காரணமாக இவருக்கும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். இவருக்கு வயது 65. கவுகாத்தியில் மத்காரியா பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார். பின்னர் ஒரு நாளில் இருவரும் ஒரே முதியோர் இல்லத்தில் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த ஓராண்டாக நட்பு இருந்த நிலையில், ஒரே ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து வந்த காரணத்தால், மனம்விட்டு பேசி பின்னாளில் காதல் வயப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இவர்களது திருமணத்தை நடத்தி வைக்க மோனாலிசா சொசைட்டி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் விருப்பம் தெரிவித்தது. அதன்படி, அனைவரது விருப்பப்படியும் ஜாம் ஜாமென்று திருமண ஏற்பாடுகள் நடந்தன. மணமக்கள் இருவருமே அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பாரம்பரிய முறைப்படி உடைகள் அணிந்து வந்தனர்.

அவர்களுக்கு பாரம்பரிய முறைப்படியே திருமண சடங்குகள் அனைத்தும் நடந்தன.. இந்த திருமணம் குறித்து தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியான உத்பால் ஹர்சவர்தன் கூறுகையில், பொது நிதி உதவியுடன் இந்த திருமணம் நடந்துள்ளது.. கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் கல்யாணத்துக்கு வந்திருந்தார்கள்.. அனைவருக்கும எங்கள் கையாலேயே உணவு பரிமாறினோம்.. மணமக்களை வந்திருந்தவர்கள் மனமார வாழ்த்தி சென்றார்கள்" என்றார்.

Read more : தினமும் 5 நிமிடங்கள் இதை செய்வதால் ரத்த அழுத்தம் குறையும்… புதிய ஆய்வில் தகவல்…

Tags :
Advertisement