முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Earthquake: அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்!… ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு!… கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம்!

04:59 AM Mar 03, 2024 IST | 1newsnationuser3
Advertisement

Earthquake: ஜப்பான் நாட்டில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, ஜப்பானில் உள்ள ஹாராவில் நேற்று மாலை 4.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது 5.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஹரா பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான உயிரிழப்புகளும் பதிவாகாத அதே வேளை, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிங்க் ஆப் பயர் எனப்படும் புவி தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும். மேலும் ஜப்பானில் உள்ள ஷிகோகுவில் கடந்த வாரம் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமும் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Readmore: பிரதம‌ மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்..!! இனி தபால்காரர் மூலமும் விண்ணப்பிக்கலாம்..!! எப்படி தெரியுமா..?

Advertisement
Next Article