முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கவுதமாலாவில் பயங்கர நிலநடுக்கம்..!! பூகம்பத்திற்கு ஆளாகும் 90% பகுதிகள்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

05:50 PM Jan 27, 2024 IST | 1newsnationuser6
Advertisement

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மத்திய அமெரிக்காவில் உள்ள நாடான கவுதமாலாவில் வெள்ளிக்கிழமை இரவு 11:52 மணிக்கு, டாக்சிஸ்கோ நகரத்தில் இருந்து 7 கிலோமீட்டர் (நான்கு மைல்) தொலைவில் 108 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது.

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய நகரமான ஆன்டிகுவா கவுதமாலாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ”இதுவரை உயிரிழப்பு அல்லது சேதம் எதுவும் பதிவாகவில்லை. அதிகாரிகள் இதனை கண்காணித்து வருகின்றனர்" என்று சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ரோடோல்போ கார்சியா தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் கூற்றுப்படி, கவுதமாலாவின் 90% பகுதிகள் பூகம்பத்திற்கு ஆளாகின்றன என கூறப்படுகிறது.

Tags :
அமெரிக்காகவுதமாலாபயங்கர நிலநடுக்கம்மத்திய அமெரிக்கா
Advertisement
Next Article