For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

10ஆம் வகுப்பு மாணவனை பலாத்காரம் செய்து மதம் மாற சொன்ன ஆசிரியை..!! அதிர்ச்சி சம்பவம்..!!

02:59 PM Nov 20, 2023 IST | 1newsnationuser6
10ஆம் வகுப்பு மாணவனை பலாத்காரம் செய்து மதம் மாற சொன்ன ஆசிரியை     அதிர்ச்சி சம்பவம்
Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவனை பெண் ஆசிரியை பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தியதாகவும், பின்னர் தனது மதத்திற்கு மாறுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும் அவனது பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். அத்துடன், இந்த விவகாரத்தை ரகசியமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில், பெண் ஆசிரியை மீது கன்டோமென்ட் பகுதி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

Advertisement

இதனால் அதிருப்தியடைந்த மாணவனின் பெற்றோர், சட்டரீதியாக இப்பிரச்சினையை அணுகினர். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் நவ.7ஆம் தேதி உத்தரவிட்டது. அதனடிப்படையில், பெண் ஆசிரியை, அவரது கணவர், அவரது சகோதரர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியை ஆகியோர் மீது நவ.16ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் சட்டவிரோதமாக மதம் மாறுவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement