மன்மோகன் சிங் மறைவு.. நாட்டையே மாற்றிய அந்த போன் கால்..! 1991-ல் அப்படி என்ன தான் நடந்தது..?
முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நேற்றிரவு உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவு ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரின் மறைவுக்கு பிரதமர் தொடங்கி பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மன்மோகன் சிங் பற்றிய பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் 1991-ல் மன்மோகன் சிங்கிற்கு வந்த ஒரே ஒரு போன் கால் எப்படி நாட்டையே மாற்றியது என்று உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அது ஜூன் 1991. மன்மோகன் சிங், நெதர்லாந்தில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு, டெல்லிக்குத் திரும்பியிருந்தார். அன்று இரவு, மன்மோகன் சிங்கின் வீட்டுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவரின் மருமகன் விஜய் தங்கா தொலைபேசி அழைப்பை எடுத்தார். மறுமுனையில் ஒலித்தது பி.வி.நரசிம்ம ராவின் நம்பிக்கைக்குரிய பி.சி.அலெக்சாண்டரின் குரல். அலெக்சாண்டர் விஜய் தங்காவிடம் தன் மாமனாரை எழுப்பும்படி கூறினார்.
மன்மோகன் சிங்கும் அலெக்சாண்டரும் சில மணிநேரங்களுக்குப் பிறகு சந்தித்தனர். அப்போது பிரதமர் நரசிம்ம ராவ் மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக நியமிக்க திட்டமிட்டுள்ளதாக அலெக்சாண்டர் கூறினார். அப்போதைய யுஜிசி தலைவரான மன்மோகன் சிங், அரசியலில் பெரிதும் ஆர்வம் இல்லாதவர் என்பதால் அலெக்சாண்டர் கூறியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் இந்த விஷயத்தில் நரசிம்ம ராவ் மிகவும் தீவிரமாக இருந்தார். ஜூன் 21 அன்று, சிங் தனது UGC அலுவலகத்தில் இருந்தார். வீட்டிற்குச் சென்று, ஆடை அணிந்து, பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவு அவருக்கு வந்தது.
மன்மோகன் சிங்கின் மகள் எழுதிய 'Strictly Personal, Manmohan & Gursharan’ என்ற புத்தகத்தில் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளார். அதில் “பதவிப் பிரமாணம் செய்ய அணிவகுத்து நிற்கும் புதிய அணியில் என்னைப் பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர். எனது இலாகா பின்னர் ஒதுக்கப்பட்டது, ஆனால் நான் நிதியமைச்சராகப் போகிறேன் என்று நரசிம்மராவ் ஜி நேரடியாகச் சொன்னார்” என்று மன்மோகன் சிங் சொன்னதாக அதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டது, இந்தியாவின் பொருளாதாரத்தின் போக்கையே மாற்றியது. கட்டுப்பாடு-கனமான, குறைந்த வளர்ச்சி கொண்ட பொருளாதாரத்தில் இருந்து இன்று உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக மாறியது.
நரசிம்ம ராவுடன் சேர்ந்து, மன்மோகன் சிங் 1991 சீர்திருத்தங்களின் சிற்பியாக இருந்தார். எனினும் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் விமர்சனங்களை எதிர்கொண்டார். பொருளாதாரம் சிதைந்து போனது, அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.2,500 கோடியாக குறைந்தது, 2 வார இறக்குமதிக்கு போதுமானதாக இல்லை, உலக வங்கிகள் கடன் வழங்க மறுத்தன, அந்நிய செலாவணி வெளியேற்றம் அதிகமாக இருந்தது, பணவீக்கம் உயர்ந்தது.
ஆனால் இந்த பிரச்சனைகளை மன்மோகன் சிங் முன்பே அறிந்திருந்தார், மேலும் ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் தனது பட்ஜெட் உரையில் இதுகுறித்து சுட்டிக்காட்டினார். மன்மோகன் சிங் அப்போதைய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த சி ரங்கராஜனுடன் இணைந்து ரூபாயின் மதிப்பைக் குறைத்தார். அப்போது வர்த்தக அமைச்சராக இருந்த ப சிதம்பரத்துடன் கூட்டு சேர்ந்து ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்கினார்.
மன்மோகன் சிங் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த ஜூலை 24 அன்று, இந்தியப் பொருளாதாரம் விடுதலையைக் கண்டது. பட்ஜெட்டுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, நரசிம்ம ராவ் அரசாங்கம் புதிய தொழில்துறை கொள்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 1990-91ல் பலவீனமான கூட்டணிக்கு தலைமை தாங்கிய சந்திர சேகரின் பொருளாதார ஆலோசகராக இருந்த மன்மோகன் சிங் குறுகிய காலத்தில் தான் பார்த்ததை நினைவு கூர்ந்தார்.
பொருளாதார ஆலோசகர் ராகேஷ் மோகன் தயாரித்த ஆவணத்தின் அடிப்படையில், 18 துறைகளைத் தவிர மற்ற அனைத்து துறைகளிலும் தொழில்துறை நீக்கம் மேற்கொள்ளப்பட்டது, மேலும் 34 தொழில்களில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டது. தவிர, பல துறைகளில் பொதுத்துறை ஏகபோகம் முடிவுக்கு வந்தது மற்றும் அரசு நடத்தும் நிறுவனங்களில் அரசாங்கத்தின் பங்குகளை திரும்பப்பெற அனுமதித்தது.
அவரது பட்ஜெட், செபியை அமைப்பதன் மூலம் இந்திய நிறுவனங்களின் நிதி திரட்டலை விடுவித்தது. நிதித்துறைக்கான புதிய கட்டமைப்பை உருவாக்க RBI கவர்னர் எம் நரசிம்மனின் கீழ் ஒரு புதிய குழுவையும் அறிவித்தது. வரவுசெலவுத்திட்டமானது வீண் செலவினங்களைக் குறைப்பதன் மூலம் நிதி ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்தியது.
தனது 1991 பட்ஜெட் உரையின் போது பேசிய மன்மோகன் சிங் “ பணவீக்கம் இரட்டை இலக்க அளவை எட்டியிருப்பதால், நமது மக்கள் தொகையில் உடனடி கவலையாக இருக்கும் விலை நிலவரமானது கடுமையான சிக்கலை ஏற்படுத்துகிறது. நிதியாண்டின் போது மார்ச் 31, 1991 இல் முடிவடைந்த ஆண்டு மொத்த விலைக் குறியீடு 12.1% அதிகரித்தது, அதே நேரத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு 13.6% அதிகரிப்பைப் பதிவு செய்தது. 1990-91 இல் பணவீக்கத்தின் முக்கிய கவலைக்குரிய அம்சம், அது அத்தியாவசியப் பொருட்களில் குவிந்திருந்தது" என்று சிங் கூறினார்.
அந்த சீர்திருத்தங்கள் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு வந்து உலகளவில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகவே இன்று இந்தியா பொருளாதாரத்தில் உலகின் வேகமாக வளரும் நாடாக மாறியுள்ளது.
Read More : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள்கள் யார்..? அவர்களின் தொழில், கல்வி, சாதனைகள் பற்றி தெரியுமா..?