குட் நியூஸ்... டீ, காபி குடித்தால் இந்த புற்றுநோய் வராது!!! ஆரய்ச்சியில் வெளியான தகவல்..
உணவு இல்லாமல் கூட இருந்து விடுவேன், ஆனால் டீ அல்லது காபி இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று கூறும், டீ வெறியர்கள் அதிகம். டீ குடிப்பது நல்லது அல்ல என்று நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் டீ அல்லது காபி குடிப்பதால் ஒரு சில புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க முடியும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆம், உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புற்று நோய் குறித்த ஆய்வுகள் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில் நடத்தப்பட ஆய்வின் படி, டீ அல்லது காபி குடிப்பதால் தலை, கழுத்து, வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கப் டீ குடிப்பதால் 9% ஆபத்தை குறைக்க முடியும் என்பது கேன்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கூறுகிறது.
இது குறித்து, அமெரிக்காவின் யூட்டா பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் பணிபுரியும் ஆய்வின் மூத்த எழுத்தாளர் யுவான்-சின் அமி லீ எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறம் போது, காபி மற்றும் டீ குடிப்பது தலை, கழுத்து, வாய் மற்றும் தொண்டை போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைகிறது என கூறியுள்ளார். தலை மற்றும் கழுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9,548 பேரிடமும், புற்று நோய் இல்லாத 15,783 பேரிடமும் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், காபி குடிக்காதவர்களை விட, ஒரு நாளைக்கு 4 கப் காஃபின் காபி குடிப்பவர்களுக்கு தலை மற்றும் கழுத்து புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 17% குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
காபி மற்றும் டீயில் உள்ள காஃபின் போன்ற பையோகெமிக்கல் காம்பௌண்ட்ஸ் ஆன்டிஇன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டதால், காபி குடிப்பது பல்வேறு வகையான புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். ஆனால் இதுவே நிரந்தர தீர்வாகாது. புற்று நோய் வராமல் தடுக்க, ஆரோகியமான உணவுகளை சாப்பிட்டு, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது அவசியம்.