ஜனவரி 1ஆம் தேதி முதல் அதிரடியாக உயரும் வரி..!! இந்தியாவுக்கு செக் வைத்த சுவிட்சர்லாந்து..!! அங்கீகாரமும் ரத்து..!!
'விருப்பத்துக்குரிய நட்பு நாடு' பட்டியலில் இருந்து இந்தியாவை சுவிட்சா்லாந்து நாடு நீக்கியுள்ளது. சுவிட்சா்லாந்தைச் சோ்ந்த நெஸ்லே நிறுவனத்திற்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த நடவடிக்கை 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகாவும், சுவிட்சா்லாந்து நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இது இந்தியாவில் சுவிஸ் முதலீடுகளை பாதிக்கலாம் மற்றும் சுவிட்சர்லாந்தில் செயல்படும் இந்திய நிறுவனங்களுக்கு வரிகளை உயர்த்தலாம். இதுநாள் வரை இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த 'விருப்பத்துக்குரிய நட்பு நாடு' என்ற அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாகவும், இதன் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான வரி தொடா்பான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அந்நாட்டு நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஜனவரி 1ஆம் தேதி முதல் சுவிட்சர்லாந்தில் இந்திய நிறுவனங்களின் ஈவுத்தொகைக்கு 10% வரி விதிக்கப்படும்.
இதுகுறித்து Nangia Andersen M&A வரி பங்குதாரர் சந்தீப் ஜுன்ஜுன்வாலா கூறுகையில்,
இன்றைய உலகளாவிய சூழலில் சர்வதேச வரி ஒப்பந்தங்களை நிர்வகிப்பதில் உள்ள சவால்களை எடுத்துக்காட்டி, சுவிட்சர்லாந்தில் உள்ள இந்திய நிறுவனங்கள் அதிகரித்த வரிக் கடமைகளை எதிர்கொள்ளக்கூடும். முன்கணிப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான வரி ஒப்பந்தத்தின் உட்பிரிவுகளின் விளக்கம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றில் உடன்படிக்கை பங்காளிகள் உடன்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.