ஈரான் மீது போரா?. எந்த சூழ்நிலையிலும் எதுவும் நடக்கலாம்!. டிரம்ப் அதிரடி!.
Trump: மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலையில், ஈரான் மீது எதுவும் நடக்கலாம் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசாத் தலைமையிலான சிரியா நாடு எப்போதும் ஈரானுக்கு ஆதரவு கொடுத்து வந்தது. தற்போது அசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில், ஈரான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மட்டுமின்றி, லெபனானில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா படைகளும் தற்போது வலுவிழந்து காணப்படுகிறது. இதனால், ஈரான் ஆதரவு நாடுகள் எதுவும் தலையிட வாய்ப்பில்லை என்பதை புரிந்துகொண்ட இஸ்ரேல், இந்த அரிய வாய்ப்பினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் மீது தாக்குதல் தொடுக்க வாய்ப்புக்காக காத்திருந்த இஸ்ரேல், இந்த முடிவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளதே காரணமாக கூறப்படுகிறது. இந்தநிலையில், ஈரானுடன் போர் தொடுக்கும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள டொனால்டு ட்ரம்ப் எதுவும் நடக்கலாம் என பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில், டைம் இதழின் ஆண்டின் சிறந்த நபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், ஈரான் தொடர்பில் தமது கருத்துகளை பதிவு செய்துள்ளார். எதுவும் நடக்கலாம் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலையாக பார்ப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் ரஷ்யாவிற்குள் உக்ரைன் ஏவுகணைகளை வீசுவதுதான் இப்போது மிகவும் ஆபத்தான விடயம் என்று தாம் நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஈரான் மீது ஏற்கனவே டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். ட்ரம்பை கொல்ல ஈரான் திட்டமிட்டதாகவும் அமெரிக்க அரசாங்கம் வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.