மழைக்காலத்திற்கு ஏற்ற காரசாரமான ஸ்பெஷல் முட்டை பொடி மசாலா எப்படி செய்யலாம்னு தெரிஞ்சிக்கலாம்.! சில நிமிட ரெசிபி.!
எப்போதும் ஒரே மாதிரியான டிஷ் செஞ்சு சாப்பிட்டு போர் அடிக்குதா வாங்க டிஃபரண்டா பொடி முட்டை மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இது செய்றதுக்கு 4 அவித்த முட்டைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முட்டை மசாலாவிற்கான பொடி செய்வதற்கு 1 டேபிள் ஸ்பூன் முழு கொத்தமல்லி, உளுந்து, மிளகு, 6 வர மிளகாய், 4 பல் நாட்டு பூண்டு, சிறிது கருவேப்பிலை இலைகள் ரெண்டு டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி அல்லது குழம்பு பொடி ஒரு டீஸ்பூன் மஞ்சள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் உளுந்து, மிளகு, கொத்தமல்லி மற்றும் வர மிளகாய் ஆகியவற்றை லேசாக எண்ணெயில் வறுத்து அவற்றுடன் வறுத்த நாட்டு பூண்டு மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்றாக பவுடர் செய்து கொள்ளவும். இவற்றுடன் உப்பு மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் அல்லது குழம்பு பவுடர் சேர்த்தால் சுவையான பொடி ரெடி.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் அவித்த முட்டைகளை பாதியாக வெட்டி நன்றாக வறுத்து எடுக்க வேண்டும். முட்டைகள் நன்கு வருந்ததும் அவற்றுடன் நாம் தயார் செய்து வைத்திருக்கும் பொடி மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்கவும். சுவையான பொடி முட்டை மசாலா தயார்.